வவுனியா, பெரியதம்பனை பகுதியில் யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று(06.08.2025) புதன்கிழமை இரவு 7.30 மணியளவில்
இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்த நபர் மீதே யானை தாக்கியுள்ளது.
மேலதிக விசாரணைகள்
சம்பவத்தில் கிடாப்பிடிச்சகுளம், நட்டாங்கண்டலை வதிவிடமாகக் கொண்ட நபரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
