காலி (Galle) தொடந்துவ பகுதியில் இடம்பெற்ற மத ஊர்வலத்தில் பங்கேற்ற யானை ஒன்று குழப்பமடைந்தன் காரணமாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (28) நிகழ்ந்துள்ளது.
இதன்போது குறித்த யானை, ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் ஒருவரைத் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.