Home இலங்கை சமூகம் ஆபத்தான நிலையில் இலங்கை தொடருந்து சேவைகள்! 11 தொடருந்துகள் தடம்புரள்வு

ஆபத்தான நிலையில் இலங்கை தொடருந்து சேவைகள்! 11 தொடருந்துகள் தடம்புரள்வு

0

கடந்த மாதத்தில் மலையகம் மற்றும் கடலோர தொடருந்து பாதைகளில் மொத்தம் பதினொரு தொடருந்துகள் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து தண்டவாளங்கள், தொடருந்து என்ஜின்கள், பெட்டிகள் மற்றும் புவியியல் காரணங்களினால் ஏற்பட்ட பராமரிப்பு பிழைகள் காரணமாகவே தொடருந்துகள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணங்கள்

விசாரணைகளின்படி, பெரும்பாலான தொடருந்துகள் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளில் உள்ள சக்கரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

குறிப்பாக மலையக பாதையில் தண்டவாளங்களின் மோசமான பராமரிப்பு காரணமாக சில தொடருந்துகள் தடம் புரண்டுள்ளன.

இப்பகுதியின் புவியியல் சூழ்நிலை காரணமாக பெரும்பாலான தொடருந்து பாதைகள் பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ளன.

புவியியல் சூழ்நிலை

மலையக பாதைக்கு ஒதுக்கப்பட்டுள்ள சில தொடருந்து பெட்டிகளும் இயந்திரங்களும் அங்கு இயங்குவதற்கு ஏற்றதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக தொடருந்து பாதையில் பொருத்தமற்ற தொடருந்து பெட்டிகள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தியமையினாலும் அண்மையில் தொடருந்து தடம்புரண்டு விபத்துக்கள் ஏற்பட்டன.

மேலும், தொடருந்து தண்டவாளத்திற்கு அருகில் உள்ள மண் தளர்வானது, தடம் புரண்டதற்கு காரணம் என்று திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version