Home உலகம் 12வது குழந்தைக்கு தந்தையானார் எலான் மஸ்க்

12வது குழந்தைக்கு தந்தையானார் எலான் மஸ்க்

0

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (வயது 52), 12வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்லா, ஸ்பேஸ், எக்ஸ் உட்பட பல நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்(elon musk) இன்று 12வது குழந்தையின் தந்தை ஆகியுள்ளார்.

ஆனால் என்ன குழந்தை பிறந்தது அதன் பெயர் தொடர்பான விபரம் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கனவே 11 குழந்தைகள்

எலான் மஸ்கின் முதல் மனைவிக்கு 5 குழந்தைகள், அதன் பின் இரண்டாவது மனைவி பாடகி ஒருவருடன் அவர் வாழ்ந்த நிலையில் அவருக்கு மூன்று குழந்தைகள், அதன் பின்னர் இன்னொரு மனைவிக்கு மூன்று குழந்தைகள் என 11 குழந்தைகள் இருந்த நிலையில் தற்போது 12வது குழந்தை பிறந்துள்ளது.

ஐக்யூ அதிகம் உள்ளவர்கள்

ஐக்யூ அதிகம் உள்ளவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று கூறி உள்ள மஸ்க் தற்போது 12வது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார்.

இதையடுத்து அவருக்கு உலகின் முன்னணி தொழில் அதிபர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version