Home விளையாட்டு கால்பந்து உலகிலும் தடம் பதிக்கப்போகும் எலோன் மஸ்க்

கால்பந்து உலகிலும் தடம் பதிக்கப்போகும் எலோன் மஸ்க்

0

பிரபல கால்பந்து கிளப் அணியான லிவர்பூல் அணியை(liver pool) எலோன் மஸ்க்(elon musk) வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இது தெதாடர்பாக எலோன் மஸ்க்கின் தந்தை எர்ரோல் மஸ்க் கூறியதாவது:

நான் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. அவர்கள் விலையை ஏற்றிவிடுவார்கள்.

எலோன் மஸ்க் தந்தை வெளியிட்ட தகவல்

லிவர்பூல் அணியை வாங்குவாரென்றால் அவருக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால், அதற்காக அவர் வாங்கிவிடுவார் என்று சொல்லமுடியாது. யாராக இருந்தாலும் வாங்கமுடியும் எனில் அவரும் வாங்குவார் என்றார்.

தற்போது, லிவர்பூல் அணி எஃப்எஸ்ஜி (ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப்) வசமிருக்கிறது. அந்த அணியை விற்கும் எண்ணம் இல்லை ஆனால் வெளியிலிருந்து யாராவது முதலீடு செய்தால் அதற்கு சம்மதம் என தெரிவித்திருந்தார்கள்.

ஃபோர்ப்ஸ் இதழில் லிவர்பூல் அணியின் மதிப்பு 4.3 பில்லியன் டொலராக (ரூ.2.37 லட்சம் கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது.

 புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் 

ஆங்கில பிரீமியர் லீக்கில் வெற்றிகரமான அணியாக லிவர்பூல் இருக்கிறது. 2 சாம்பியன்ஸ் லீக், 19 இபிஎல் டைட்டில்ஸ், 3 யுஇஎஃப்ஏ கோப்பைகள், 8 எஃப்ஏ கோப்பைகள் வென்றுள்ளன.

நடப்பு தொடரில் லிவர்பூல் அணி 19 போட்டிகளில் 46 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா வேறு அணிக்கு மாற்றப்படலாம் என சமீபத்திய தகவல் வெளியாகிய நிலையில் எலோன் மஸ்க் வாங்கினால் அவர் இதே அணியில் தொடர்ந்து விளையாடலாமென அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version