இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் எண்ணிக்கை
அந்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைந்துள்ளது.
நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படுமா..! அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2022ஆம் ஆண்டில் 49.8 சதவீதத்திலிருந்து 2023இல் 48.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக, வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் 4.7 சதவீதமாக மாறாமல் உள்ளது.
மக்களுக்கான கொடுப்பனவு குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
வேலையில்லாத மக்கள் தொகை
2022இல் 0.399 மில்லியனாக இருந்த வேலையில்லாத மக்கள் தொகை 2023இல் 0.39 மில்லியன் வரை சிறிதளவு குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022 இல் 8.14 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.01 மில்லியனாகக் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் தாயின் கொடூர செயல் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |