Home விளையாட்டு விடைபெற்ற தங்கமகன் லூகா: மைதானத்தில் முழங்காலிட்டு அழுத காட்சி

விடைபெற்ற தங்கமகன் லூகா: மைதானத்தில் முழங்காலிட்டு அழுத காட்சி

0

போர்ச்சுகலுக்கு எதிராக தோல்வியடைந்த குரோஷியா நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியது.

தோல்வியை தொடர்ந்து உலகக் மேடையில் இருந்து குரோஷியாவின் தங்கமகன் லூகா மோட்ரிக் (Luka Modrić) அழுது கொண்டே விடைபெறுள்ளார்.

நாக்-அவுட் ஆட்டத்தின் இறுதி விசிலைக் கேட்டதும், லூகா மோட்ரிக் மைதானத்தில் முழங்காலிட்டு தலையை கைகளால் மூடி அழுத காட்சிகள் எத்தனையோ ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக உடைக்கும் படியான அமைந்தது.

பரபரப்பான ஆட்டங்கள்

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2ஆவது சுற்று ஆட்டங்கள் (நொக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன.

இதில்,
கனடாவின் டொரண்டோ மைதானத்தில் அதிகாலை 4.30 மணியளவில் நடந்த 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகள் விளையாடின.

போட்டியின் முதல் பாதியில் 0-0 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

அப்போது ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.

கோலாக மாற்றி சமனிலை 

ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதனை ரொனால்டோ கோலாக மாற்றி சமனிலை ஏற்படுத்தினார்.

90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

அப்போது ஆட்டத்தின் 90+4 நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கொண்ட்சாலோ ராமோஸ் அபாரமான கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதையடுத்து குரோஷியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  

Source: https://ibctamil.com/article/end-of-an-era-modri-says-goodbye-to-world-cup-2026-1783054752

NO COMMENTS

Exit mobile version