Home உலகம் ஈரானில் ஆட்சி மாற்றம்!! இஸ்ரேலின் ஆணித்தரமான இலக்கு: நெதன்யாகு அதிரடி

ஈரானில் ஆட்சி மாற்றம்!! இஸ்ரேலின் ஆணித்தரமான இலக்கு: நெதன்யாகு அதிரடி

0

ஈரானின் ஆட்சியை மாற்றுவதே தற்போதைய போர் நடவடிக்கையின் விளைவாக இருக்கலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்று அவர் கருத்து தெரிவித்த அவர், “நான் இதைப் வரலாற்று பார்வையில் பார்க்கிறேன். சைரஸ் யூதர்களை விடுவித்தார். இன்று யூத அரசு பாரசீகர்களை விடுவிக்கலாம்.

இது அவர்களுக்காக நாங்கள் செய்கிறோம் என்பதல்ல. அவர்கள் தாங்களே எழுந்து வரவேண்டும், நாங்கள் அதற்கான சூழலை உருவாக்குகிறோம்,” என்றார்.

ஈரான் அரசாங்க எதிர்ப்பு

அத்தோடு, ஈரானியர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்களது அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர் என்றும் நெதன்யாகு கூறினார்.

அத்துடன், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியை “தற்போதைய ஹிட்லர்” என அழைத்த அவர், “இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் எனவும் ஈரானின் பல முக்கிய ஆட்சி கட்டமைப்புகள் இன்னும் அழிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

புதிய மத்தியகிழக்கு

இதன்படி, இந்த போர், மத்தியகிழக்கு முழுவதும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என நம்பிக்கை வெளியிட்ட நெதன்யாகு, இதுவரை யாரும் காணாத மத்தியகிழக்கு உருவாகிறதாகவும் தெரிவித்தார்.



மேலும், அரபு நாடுகள் இஸ்ரேலை மேலும் விரிவாக ஏற்கத் தொடங்கும் எனவும் அபிரகாம் ஒப்பந்தம் (Abraham Accords) எனப்படும் இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளுக்கிடையேயான சமாதான ஒப்பந்தம், இந்தப் போர் சூழ்நிலையில் மேலும் பல நாடுகளுக்கு விரிவடைய வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  


NO COMMENTS

Exit mobile version