Courtesy: H A Roshan
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க திருகோணமலையில் 16 நாள் செயற்பாடு எனும் வீதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வை இன்று (06) திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, 1000 பெண்கள் அடங்கிய ஊர்வலமொன்று திருகோணமலை துறைமுக பொலிஸ் முன்றலில் இருந்து உட்துறைமுக வீதியில் உள்ள இந்து கலாச்சார மண்டபத்தை சென்றடைந்துள்ளது.
விழிப்புணர்வூட்டல்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் பல விழிப்புணர்வூட்டல்களை இதன்போது முன்னெடுத்திருந்தனர்.
ஆண் பெண் என்ற ரீதியில் கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் மற்றும் பெண்கள் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளை தடுக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்ற கொள்கை ஊடாக இந்நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.