Home இலங்கை சமூகம் மின்சார கட்டடணத்தை குறைக்க கிளம்பியது எதிர்ப்பு

மின்சார கட்டடணத்தை குறைக்க கிளம்பியது எதிர்ப்பு

0

மின்சாரக் கட்டணம் பாரியளவில் குறைக்கப்பட்டால், மின்சார சபையை தொடர்ந்து செயற்படுத்துவது கடினமாகும் என மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் கண்டிப்பாக குறைக்கப்பட வேண்டும் ஆனால் தேவையில்லாமல் குறைக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நூலக சேவைகள் மற்றும் ஆவணச் சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மின்சார சபை இலாபம் ஈட்டும் அமைப்பல்ல

கடந்த ஆறு மாதங்களில் மின்சார சபை ஓரளவு இலாபம் ஈட்டினால், அடுத்த 6 மாதங்களுக்கு அதன் பயனை நுகர்வோர் பெற வேண்டும் என்றும், தற்போது இருப்பது போல் மின்சார சபை இலாபம் ஈட்டும் அமைப்பல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதிய மின்சாரச் சட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது, ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு இல்லாதிருந்தால், புதிய சட்டத்தின் மூலம் மின்சாரத் துறை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என்று அவர் கூறினார்.

அனைவரும் மிகுந்த கவனத்துடன்

மின்சாரத்துறையை பாதுகாக்கவும், நாட்டு மக்களை வஞ்சிக்கும் சூழலை உருவாக்கும் முயற்சிகளை முறியடிக்கவும் நாட்டை நேசிக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடன் பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.  

NO COMMENTS

Exit mobile version