நாளை 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை(sri lanka) மற்றும் இங்கிலாந்து(england) அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரின் முதல் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி நேற்று (19) பிற்பகல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, காயம் அடைந்த வழக்கமான டெஸ்ட் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக இளம் சகலதுறை வீரர் மேத்யூ பாட்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இளம் சகலதுறை வீரர்
தற்போது 25 வயதாகும் போட்ஸ் இதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தாலும், 2023 ஜனவரியில் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதில் இருந்து அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
2022 இல் நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் அழைப்பை பெற்ற பொட்ஸ், 06 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 13 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல்தர துடுப்பாட்டத்தில் ஒரு சிறந்த வீரரான பொட்ஸ் 55 போட்டிகளில் 218 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
09 சந்தர்ப்பங்களில், அவர் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மற்றும் ஒரு இனிங்ஸில் அவரது சிறந்த பந்துவீச்சு 7/40 ஆகக் காணப்படுகிறது.
பந்து வீச்சில் 1067 ஓட்டங்களைப் பெற்றுள்ள அவர் ஒரு சதம் (149 ஆட்டமிழக்காமல்) மற்றும் 03 அரை சதங்களையும் பெற்றுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் காயம்
பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடமாட்டார், மேலும் ஒல்லி போப் இங்கிலாந்தின் தற்காலிக டெஸ்ட் தலைவராக செயல்படுவார்.
துணைத் தலைமைப் பதவிக்கு ஹாரி புரூக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி
டொன் லோரன்ஸ் , பென் டக்கெட், ஒல்லி போப் (அணித்தலைவர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் காப்பாளர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வூட், ஷோயிப்