Home இலங்கை அரசியல் ஈ.பி.ஆர்.எல்.எப்.மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பதவி விலகல்

ஈ.பி.ஆர்.எல்.எப்.மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பதவி விலகல்

0

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) மன்னார் மாவட்ட
பொறுப்பாளர் அருளானந்தம் விஜயராஜ் தான் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பதவியில்
இருந்து விலகியுள்ளார்.

இவ்விடயம் குறித்து கட்சியின் தலைமைக்கு எழுத்து மூலம் பதவி விலகல் கடிதத்தை
அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியத்தை புறக்கணித்து, தமிழ் தேசியத்தை கொன்று புதைத்த கட்சிகளுடன்
இணைந்து ஒரு போதும் செயல்பட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

போலி அரசியல் 

மேலும், “எதிர் வரும் காலங்களில் தமிழ் பேசும் மக்கள்,எமது இளைஞர்கள் ,யுவதிகளுக்கு
நாங்கள் சரியான பாதையை காட்ட வேண்டும்.

தமிழ் தேசியம் என கூறி போலி அரசியல்
செய்து கொண்டு போக்கிரித்தனமான செயல்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

இக்கட்சிகளுக்கு மத்தியில் நாங்கள் எவ்வாறு தமிழ் இனத்தின் போராட்டம் அல்லது
மக்களின் பலத்தை வைத்துக் கொண்டு ஏன் அவர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள்
என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகள்
அமைக்கப்பட்ட பின்னர் எங்களை கேளியாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் நாங்கள் மக்களுக்கு சரியான சேவையை செய்ய வேண்டும்.

அந்த
வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.)
மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதோடு, எதிர்
வரும் காலங்களில் தன்னிச்சையாக சுயாதீன குழுக்களுடன் எனது மக்களுக்கு சரியான
சேவையை வழங்குவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version