Home இலங்கை அரசியல் சஜித் தரப்பில் இருந்து கொழும்பு மாநகர சபைக்கு எரான்

சஜித் தரப்பில் இருந்து கொழும்பு மாநகர சபைக்கு எரான்

0

எதிர்வரும் 2025 உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவை பரிந்துரைப்பது குறித்து ஐக்கிய
மக்கள் சக்தி பரிசீலித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(10.03.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாநகர சபையில் ஒரு பதவிக்கு விக்ரமரத்னவை பரிந்துரைப்பதற்கான முன்மொழிவு
ஏற்கனவே கட்சிக்குள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை

இருப்பினும், அதிகாரப்பூர்வ
உறுதிப்படுத்தல் இன்னும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version