Home இலங்கை சமூகம் அநுர அரசில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி – சடுதியாக அதிகரிக்கும் விலைகள்

அநுர அரசில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி – சடுதியாக அதிகரிக்கும் விலைகள்

0

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், அன்றாட பாவனைக்கான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால், தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அரிசி, தேங்காய், தேங்காய் எண்ணெய், மரக்கறிகள் போன்றவற்றின் விலைகள் தாக்குப்பிடிக்க முடியாத வகையில் அதிகரித்துள்ளன.

குறைந்த வருமானம்

இதன்காரணமாக குறைந்த வருமானம் பெறுபவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சந்தையில் ஒரு கிலோ வெள்ளை அரசி 240-260 ரூபாவாகவும், தேங்காய் ஒன்றின் விலை 220-240 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மரக்கறிகளின் விலையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version