Home இலங்கை அரசியல் வடக்கு – கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை நிறுத்த வலியுறுத்து!

வடக்கு – கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை நிறுத்த வலியுறுத்து!

0

வடக்கு, கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை நிறுத்தி மாகாண சபை ஆட்சியை நடாத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமேன ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி முறைகளை விடுத்து அரசாங்கம் ஆளுநர் ஆட்சியை நடாத்துவதனை நிறுத்த வேண்டும் என தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் பார்க்கும் போது அடுத்த வருடமும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என எடுத்துரைத்த அவர், எல்லை நிர்ணய வேலைகளை விரைவில் மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது என்பதையும் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version