Home இலங்கை சமூகம் வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய எதா வெட்டுனு வெவ வித்தியாலயத்தின் நீர் பிரச்சினைக்கு தீர்வு

வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய எதா வெட்டுனு வெவ வித்தியாலயத்தின் நீர் பிரச்சினைக்கு தீர்வு

0

வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய எதா வெட்டுனு வெவ வித்தியாலயத்தின் நீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்
கொடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு
என்ற கிராமமும் ஒன்றாகும்.

நீர் விநியோக கட்டமைப்பு

மகாவலி L வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்த கிராமத்திலுள்ள எதா வெட்டுனு வெவ வித்தியாலயத்தில் 382 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 19 ஆசிரியர்கள்
சேவையாற்றுகின்றனர்.

இந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விடுதியில் நீர் விநியோக
கட்டமைப்பு சீர்க்குழைந்தமையால் பல நாட்கள் விடுமுறையில் ஆசிரியர்கள் தங்களின்
வீடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடு
பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கல் நிலைமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின்
கவனத்திற்கு கடந்த 12 ஆம் திகதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்த வடக்கு ஆளுநர் பாடசாலைக்கான நீர் பிரச்சினையை
நிவர்த்தி செய்யுமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை
விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய விரைந்து செயற்பட்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சு, எதா
வெட்டுனு வெவ வித்தியாலயத்தின் நீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை பெற்றுக்
கொடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version