எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஒரு தொடராக உள்ளது.
குணசேகரன் பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள சக்தி இராமேஸ்வரம் சென்று அங்கு தனது அண்ணன் குறித்த அதிர்ச்சியான விஷயத்தையும் தெரிந்துகொண்டார்.
குணசேகரன் தனது அப்பாவின் 2வது மனைவியை கொண்டிருக்கிறார், இந்த உண்மை தெரிந்து சக்தி, ஜனனி, நந்தினி, ரேணுகா அனைவரும் ஷாக் ஆகிறார்கள். பின் சக்தி வீட்டிற்கு வருவதற்குள் அவரை கடத்தி ஜனனியை மிரட்டி படாதபாடு படுத்திவிட்டார்.
ஆனால் ஜனனி எப்படியோ சக்தியை கண்டுபிடித்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிவிட்டார்.
செம்பருத்தி, மலர் சீரியல் பிரபலம் அக்னிக்கு திருமணம் முடிந்தது… அழகிய ஜோடியின் போட்டோ
புரொமோ
ஜனனி, சக்தியை காப்பாற்ற போராடும் போது சரியான நபர் கண்ணில் பட அப்படியே சூழ்நிலை மாறிவிட்டது. நீதிபதி ஜனனி சொன்னதை கேட்டு தனி குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
குணசேகரன் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது தெரிய வந்ததும், அண்ணன்-தம்பிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்.
அடுத்து என்ன நடக்கும் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்றைய எபிசோட் புரொமோ வருகிறது. அதில் ஓவராக பேசிய அறிவுக்கரசியை தூக்கிப்போட்டு மிதித்து மாஸ் சம்பவம் செய்கிறார்.
