எதிர்நீச்சல் தொடர்கிறது
அடடா, இப்படியெல்லாம் தனியா ரூம் போட்டு யோசிப்பாங்களா என ரசிகர்கள் ஷாக் ஆகும் அளவிற்கு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதைக்களம் அமைந்து வருகிறது.
கதையில் குணசேகரன் பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள இராமேஸ்வரன் சென்ற சக்திக்கு தனுஷ்கோடியில் எல்லா உண்மையும் தெரிய வருகிறது.
எதிர்ப்பாரா விதமாக அவர் போன் ஆன் ஆக குணசேகரன் முழு உண்மையை ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோரும் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் சக்தி வீட்டிற்கு வராமல் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள்.
நேற்றைய எபிசோடில், மதுரை திரும்பிய சக்தியை யாரோ தாக்கி தூக்கிச் சென்றுவிடுகிறார்கள்.
எபிசோட்
சக்தியை அடித்து தொங்கவிட்டுள்ள போட்டோ ஜனனிக்கு வர அவர் கதறி அழுகிறார். குணசேகரனிடம் சக்தியை என்ன செய்தீர்கள் என கதறி அழ அவர் வழக்கம் போல் நாடகம் போடுகிறார்.
குணசேகரனிடம் சக்தியை விட்டுவிடுமாறு கெஞ்சி கதறுகிறார், ஆனால் அவரும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.
உண்மையில் சக்தியை அடித்து தொங்க விட்டிருப்பது வேறு யாரும் இல்லை ஜனனியின் பெரியப்பா பையன் ராமசாமி மெய்யப்பன் தான் அடித்து தொங்கவிட்டுள்ளார்.
