எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பற்றிய பேச்சு தான் அதிகம் உள்ளது.
காரணம் அடுத்தடுத்த அதிரடியான விறுவிறுப்பான கதைக்களத்துடன் தொடர் ஒளிபரப்பாகிறது. ஆண் திமிரில் இருந்த குணசேகரனை தனது சொந்த வீட்டில் இருந்தே ஓடவிட்டுள்ளார் ஜனனி.
அடுத்து எந்த பிரச்சனை குறித்தும் யோசிக்காமல் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் முன்னேற கூடாது என குணசேகரனும் நிறைய பிளான் போடுகிறார் ஆனால் ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை.
புரொமோ
இன்றைய எபிசோடின் புரொமோவில், நந்தினிக்கு ஒரு போன் கால் வருகிறது.
அதாவது ஈஸ்வரியை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என கூறிவிட்டார்களாம், அவரும் திறப்பு விழாவில் இருப்பார் என கூறி சந்தோஷப்படுகிறார்.
பின் கடை திறப்பு விழா பற்றி பேசும் போது, நந்தினி எனக்கு பட படனு வருது, என்ன நடக்கும், எப்படி நடக்கும் போன்ற பயங்கள் இருக்கிறது என கூற, ஜனனி தைரியமாக இருங்கள் நாம் சாதிப்போம் என கூறி தைரியம் கொடுக்கிறார்.
