சன் டிவி
ஏகப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பி கெத்து காட்டி வருகிறது சன் தொலைக்காட்சி. கடந்த வார சீரியல்களின் டிஆர்பியில் முதல் 5 இடத்தை மொத்தமாக பிடித்திருந்தது சன் டிவி சீரியல்கள்.
சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் தொடர்கிறது, மருமகள் தொடர்கள் எல்லாம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
புதிய பைக் வாங்கியுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்… அவரே வெளியிட்ட போட்டோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
இந்த சீரியலில் குணசேகரன் தான் ஈஸ்வரியை தாக்கினார் என்பது ஜனனிக்கு தெரிந்துவிட்டது.
ஜீவானந்தத்திற்கு ஈஸ்வரி அனுப்பிய ஆடியோ மெசேஜ் கிடைத்துவிட்டது, ஆனால் இது சரியான ஆதாரமாக இருக்காது என்கிறார். இதனால் ஜனனி அறிவுக்கரசியிடம் ஏதோ ஒரு விஷயம் சிக்கியுள்ளது அதை கண்டுபிடிக்க பிளான் போடுகிறார்கள்.
இன்றைய எபிசோடில் நந்தினி, அறிவுக்கரசி போன் எடுத்து ஜனனியிடம் கொடுக்க அதை அவர்கள் பார்ப்பதற்குள் போனை அறிவுக்கரசி வாங்கிவிடுகிறார்.
பின் அவர் ஈஸ்வரி போனை எங்கே வைப்பது என யோசிக்கும் போது அவரது அறைக்குள் யாரோ வர பயந்துவிடுகிறார்.
யார் அது, அறிவுக்கரசியிடம் இருந்து ஜனனி போனை பெறுவாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
இன்றைய எபிசோட் புரொமோ,
