Home சினிமா வீட்டிற்குள் நுழைந்த குணசேகரன், அதிரடி முடிவு எடுத்த அவரது வீட்டுப் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியல் அதிரடி...

வீட்டிற்குள் நுழைந்த குணசேகரன், அதிரடி முடிவு எடுத்த அவரது வீட்டுப் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியல் அதிரடி புரொமோ

0

எதிர்நீச்சல் 

கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் அவர்கள் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் எதிர்நீச்சல்.

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் டிஆர்பியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மாஸாக ஒளிபரப்பாகி வந்தது.

ஆனால் தொடரின் முக்கிய கதாபாத்திரமாக பார்க்கப்பட்ட குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு சீரியல் கொஞ்சம் டல் அடிக்க தொடங்கியது என்றே கூறலாம்.

இதனால் முதல் பாகம் குணசேகரன் செய்த தவறுக்காக ஜெயில் செல்வது போல் காட்டப்பட்டு முடிவுக்கு வந்தது.

அதிரடி புரொமோ

இரண்டாம் பாகம் சில கதாபாத்திர மாற்றத்துடன் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

குணசேகரனை தைரியமாக எதிர்த்து வந்த ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி தற்போது அவரை வீட்டிற்குள் வர அனுமதித்துவிட்டு அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். இந்த அதிரடி புரொமோ தற்போது வைரலாகி வருகிறது.

NO COMMENTS

Exit mobile version