Home விளையாட்டு ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்

0

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின்(Spain) அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை(Germany) வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகின்ற நிலையில், பிரான்ஸ், போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் இந்த தொடரில் நேற்று(5) இரவு நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் – ஜெர்மனி அணிகள் மோதின.

அரை இறுதிக்கு முன்னேற்றம்

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.

இந்த நிலையில் இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரர் டேனி ஒல்மா ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி வீரர் புளோரியன் விர்ட்ஸ் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் வழக்கமான ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 119-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

தற்போது, பிரான்ஸ் மற்றும் போர்த்துகல் அணிகள் மோதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version