புதிய இணைப்பு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரணதுங்கவை குறித்த அதிகாரிகள் கைது செய்தனர்.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ள நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் நேரடி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்காக ஒரு தனியார் தரகர் நிறுவனத்தை சட்டவிரோதமாக நியமித்ததாகவும், இதனால் இலங்கை காப்பீட்டுக் கூட்டுத்தாபனத்திற்கு 4,750,828.72 ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக (CIABOC) தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று (12) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
you may like this
https://www.youtube.com/embed/1dzlA1-vgyM
