அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்பிற்கு, முன்னாள் FBI தலைமை அதிகாரியால் படுகொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் FBI தலைமை அதிகாரியான ஜேம்ஸ் கோமி தனது சமூக வலைதள பக்கத்தில் இட்டுள்ள பதிவில் ட்ரம்பிற்கு படுகொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
FBI தலைமை அதிகாரி
இந்நிலையில் ஜேம்ஸ் கோமி மீது குறித்த பதிவு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
டிரம்பின் கடுமையாக விமர்சிக்கும் ஒருவரான ஜேம்ஸ் கோமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் ட்ரம்பிற்கு படுகொலை அச்சுறுத்தலாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Just James Comey causally calling for my dad to be murdered.
This is who the Dem-Media worships. Demented!!!! pic.twitter.com/4LUK6crHAT
— Donald Trump Jr. (@DonaldJTrumpJr) May 15, 2025
இதற்கிடையில், தான் இவ்வாறு புகைப்படம் பகிர்ந்து கொண்டது, வன்முறைக்கான அழைப்பு அல்ல என்று ஒரு அறிக்கையில் மறுத்து, “நான் எந்த வகையான வன்முறையையும் எதிர்க்கிறேன்” என்று ஜேம்ஸ் கோமி கூறியுள்ளார்.
உளவுத்துறை விசாரணை
அதன் பின்னர் அவர் குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
இருப்பினும், அவரது மறுப்பு ட்ரம்பின் ஆதரவாளர்களை அமைதிப்படுத்த உதவவில்லை, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் உளவுத்துறையும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அறிவித்தன.
இதற்கமைய, குறித்த பதிவு தொடர்பில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் உளவுத்துறையும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
