முல்லைத்தீவில் யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் நேற்றைய தினம் (14) காலை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மஹ்ரூஸ் மேற்பார்வையில் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிபதியின் உத்தரவு
விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர், புதுக்குடியிருப்பு காவல்துறையினர் இணைந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.
பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அகழ்வு இடம்பெறும் பகுதியில் 2021 ஆம் ஆண்டு அகழ்வு முன்னெடுக்கப்பட்டு எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
