Home இலங்கை சமூகம் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வி

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வி

0

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட
அகழ்வுப்பணியில் எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி
கிராம அலுவலர் பிரிவில் ஏ 35 பிரதான வீதியில் அருகே தனியார் காணி ஒன்றில்
விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அகழ்வுப்பணி இடைநிறுத்தம்

இதற்மைகவாக இன்றைய தினம்(31) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத்
ஜெமீல் தலைமையில் பொலிஸார், இராணுவத்தினர்,பொலிஸ் விசேட
அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அகழ்வுப்பணி
மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியை
நீதவான் இடைநிறுத்தினார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை – திருவிழா

NO COMMENTS

Exit mobile version