Home இலங்கை சமூகம் தோண்டத் தோண்ட வெளிவரும் உடல்கள் – திகில் கிளப்பும் செம்மணி புதைகுழி

தோண்டத் தோண்ட வெளிவரும் உடல்கள் – திகில் கிளப்பும் செம்மணி புதைகுழி

0

யாழ். (Jaffna) செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும்
அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மூன்றாவது எலும்புக்கூட்டுத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு பொதியிடப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி நேற்று இடம்பெற்றது.

கவனயீர்ப்பு போராட்டம்

இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. புதைகுழியில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.

இதேவேளை, யாழ். (Jaffna) செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ். நகர நுழைவாயில் – நாவற்குழி பகுதியில் இன்று (05.06.2025) வியாழன் காலை 10 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version