இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கும் வருமானத்தை அடுத்த மூன்று
நாட்களுக்குள் அடைய முடியும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 நவம்பர் 6ஆம் திகதியன்று நாடு தனது வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு நாள்
வருவாய் பதிவாகியுள்ளதாகவும், அது 27.7 பில்லியன் ரூபாய்களாக இருந்ததாகவும்
சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சந்தன் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
வரி இலக்கு
இதற்கு முன்னர், 2025 அக்டோபர் 15, அன்று அதிகபட்சமாக ஒரு நாள் வசூல் 24.4
பில்லியனாக ரூபாய்களாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த வருட இறுதிக்குரிய வருடாந்த வரி இலக்கு 2.115 டிரில்லியன்
ரூபாய்கள் என்றும், நேற்றைய நிலவரப்படி மொத்த வசூல் 2,066.7 பில்லியன்
ரூபாய்களை எட்டியுள்ளதாகவும் சுங்கப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
