Home இலங்கை சமூகம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கான செலவு: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கான செலவு: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

0

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கான செலவு 939.5 பில்லியன் ரூபாவாக 1.7% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பான மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் படி, 2022 ஆம் ஆண்டில், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ. 956.2 பில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் 

இதற்கமைய, 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ​​2023 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக செலவிடப்படும் தொகை ரூ. 16.7 பில்லியன் குறைந்துள்ளது.

எவ்வாறாயினும், ஓய்வூதியச் செலவு 2023 ஆம் ஆண்டு, 372.4 பில்லியன் ரூபாவாக 20.5% அதிகரித்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டில் ஓய்வூதியம் வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செலவினம் 309.1 பில்லியன் ரூபாவாகும்.

ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை

ஓய்வூதிய செலவினங்களின் அதிகரிப்புக்கான முக்கிய காரணம், ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டமை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், வளர்ந்து வரும் அரச துறையை வரையறுக்கப்பட்ட நிதி இடத்தின் கீழ் பராமரிப்பது எதிர்காலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.  

NO COMMENTS

Exit mobile version