Home இலங்கை சமூகம் யாழில் காணி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள்

யாழில் காணி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள்

0

யாழில் (Jaffna) காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றையதினம் குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நடவடிக்கைகள் 

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெறும் இந்த மீட்பு பணியில் யாழ்ப்பாண பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் ஆகியோர் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனடிப்படையில், இன்றையதினம் (22) குறித்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெறும் இந்த
மீட்பு பணியில் யாழ்ப்பாண காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் தடயவியல்
காவல்துறையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் – கொடியிறக்கம்

NO COMMENTS

Exit mobile version