Home இலங்கை சமூகம் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர் வருமானம்

ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர் வருமானம்

0

இலங்கைக்கு (Sri Lanka)  தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் 330 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் (Coconut Development Authority) தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அழகுசாதன உற்பத்திகள்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தென்னையிலிருந்து பெறப்படும் பொருட்களிலிருந்து தேங்காய் எண்ணை உற்பத்தி மற்றும் அழகுசாதன உற்பத்திகள் போன்றவற்றுக்கு சர்வதேச சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக சபையின் தலைவர் ரொஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பெறுமதி சேர் வரி வருமானம்

இதேவேளை, இலங்கையில் (Sri Lanka) பெறுமதி சேர் வரி (VAT) வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு (Ministry of Finance) தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ஆம் ஆண்டில் வரி வருமானம் 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2023 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரி மூலம் 694.5 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version