Home இலங்கை சமூகம் களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான நிலையில்! இன்னும் ஓரிரு மணி நேரங்களே..

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான நிலையில்! இன்னும் ஓரிரு மணி நேரங்களே..

0

களனி கங்கையின்  நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி, கிளென்கோர்ஸில் 21.9 மீட்டரை நீர் மட்டம் தாண்டியுள்ளது. 

மேலும், ஹன்வெல்லவில் 10 மீட்டரைத் தாண்டியுள்ளது.  இரண்டும் தற்போது பாரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுங்கள் 

எனவே, வெகுவாக வெள்ள நிலை அதிகரித்து தீவிரமடையக் கூடிய சாத்தியம்  இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே, களனி கங்கையை அண்டிய பகுதியில் வசிக்கும்  மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதோடு, பாதுகாப்ப வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்னும் ஒரு சில மணிநேரங்களில் களனி கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வெள்ள நிலைமை தீவிரமடைய வாய்ப்புள்ளாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கங்கைக் கரையை அண்டிய, கொலன்னாவ, கடுவெல, ஹோமாகம, அவிசாவளை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் வேகமாக உயரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, கடும் இக்கட்டான நேரத்தில் படகுகளோ, உலங்குவானூர்திகளோ உடனடியாக வராது.  எனவே, வீடுகளுக்குள் இருந்து ஆபத்தை எதிர்நோக்குவதை விடுத்து உனடியாக பாதுகாப்பான இடத்தை நோக்கி நகருங்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கை இதற்கு முன்பு இதுபோன்ற மழையை எதிர்கொண்டதில்லை. 2016 ஆம் ஆண்டை விட நிலைமை முற்றிலும் வேறுபட்டது என்றும்,  பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு அரச அதிகாரியும்  மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைப்புடன் செயற்படுவதகாவும், எனவே அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version