Home இலங்கை சமூகம் சீரற்ற காலநிலையால் யாழில் 1598 நபர்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் யாழில் 1598 நபர்கள் பாதிப்பு

0

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 510 குடும்பங்களைச் சேர்ந்த
1598 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய
நிலையம் அறிவித்துள்ளது.

சேதமடைந்துள்ள வீடுகள் 

இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு
11 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version