களனி கங்கையை அண்டியிருக்கும் ஹங்வெல்ல பகுதி முற்றுமுழுதாக நீரில் மூழ்கியுள்ளது.
அதேசமயம், இன்னும் சில மணித்தியாலங்களில் நாகலகம் வீதியும் முற்றுமுழுதாக வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றது.
அவதானம்..
எனவே, களனி கங்கையின் இரு கரைகளிலும் இருக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாகலம் வீதி வெள்ளத்தில் மூழ்கினால் கொழும்பில் பல இடங்களில் வெள்ள அபாயத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் எனவே வெள்ள அபாயம் இருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்கள் மீட்பு குழுவினரின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
