Home இலங்கை சமூகம் மாவிலாறு அபாயம்! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

மாவிலாறு அபாயம்! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

0

மாவிலாறு குளக்கட்டில் தற்போது சிறிய அளவில் உடைப்பெடுத்துள்ள நிலையில், மேலும் பல பகுதி உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட  ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்துள்ளார். 

மாவிலாறு குளக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அண்டிய தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது.  

மக்களை  வெளியேற்றும் நடவடிக்கை

இந்தநிலையில்,   இந்த அபாய நிலை குறித்து தொடர்பில் நாம் ஏற்கனவே அறிந்துள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ரொஷான் அக்மீமன எம்.பி குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, மாவிலாறு அணைக்கட்டை அண்மித்திருந்த மக்கள் தற்போது  வெளியேற்றப்பட்டுள்ளதுடன் ஏனைய மக்களையும்  வெளியேற்றும் நடவடிக்கை  வெகுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும்,  பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்காக வான்படையின் மூன்று உலங்குவானூர்திகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,  ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதியின் நேரடி கண்காணிப்பில்  இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக ரொஷான் எம்.பி  தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version