Home இலங்கை சமூகம் வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து நோய்கள் அதிகரிக்கலாம்! யாழில் இருந்து எச்சரிக்கை

வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து நோய்கள் அதிகரிக்கலாம்! யாழில் இருந்து எச்சரிக்கை

0

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக்
கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி
அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதில்,

அண்மைய நாட்களில் பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான நிலைகள் உருவாகியுள்ளன.
குறிப்பாக தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

தாமதமின்றி வைத்தியசாலை செல்லுங்கள் 

மழைநீர் பல்வேறு வாழ்விடங்களில் புகுந்ததன் காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் நோய்
ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், தோல் வியாதிகள், சுவாசத் தொற்றுகள்,
வயிற்றோட்டம் போன்ற நோய்களும் ஏற்படலாம்.

ஆகவே, கீழ்வரும் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்:

அசுத்தமான நீரில் நடைபயணம் செய்த பிறகு, அல்லது அந்த பகுதிகளில் சென்று
வந்தால், சவர்க்காரம் பயன்படுத்தி கை, கால் உள்ளிட்ட உடல் பகுதிகளை நன்றாகக்
கழுவ வேண்டும்.

சுத்தமான குடிநீரைப் ப் பருக வேண்டும். கொதிக்கவைத்த நீரைப் பருகுவது சிறந்தது.

வாழ்விடங்களை எப்போதும் தூய்மையாக பேண வேண்டும்.

சுகாதாரமற்ற உணவுகளைத்
தவிர்க்க வேண்டும். உடல் நலத்தில் கவனம் செலுத்தி, நோய்கள் ஏற்படும் அபாயத்தை
குறைக்க வேண்டியது அவசியம்.

வைத்திய சிகிச்சை தேவைப்படும் போது தாமதமின்றி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்
என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version