யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மருதங்கேணியில் ஒருவர்
உயிரிழந்தார்.
அந்தோணி பெர்னான்டோ என்ற 66 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெள்ளத்தால் நேர்ந்த மரணம்..
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையில்
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக
உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நெடுந்தீவு மற்றும் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த
இருவரும் அனர்த்தத்தில் காயமடைந்தனர்.
