Home இலங்கை சமூகம் உடைப்பெடுத்துள்ள மாவிலாறு குளக்கட்டு! வெள்ள அபாயம் தீவிரம் – உடன் வெளியேறுங்கள்..

உடைப்பெடுத்துள்ள மாவிலாறு குளக்கட்டு! வெள்ள அபாயம் தீவிரம் – உடன் வெளியேறுங்கள்..

0

Update – 12:13

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு
ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அமுனவின் கீழ் உள்ள பல கிராமங்கள் கடுமையான வெள்ளச் சேதங்களை எதிர்கொண்டு முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.

மாவிலாறு உடைப்பினால், சோமபுர, சிறிமங்கலபுர(LB 2 பகுதி உட்பட), லிங்கபுரம், தெஹிவத்தை, நீலபொல,  சிவபுரம்,  அரியமன்கேணி,   ராக்குலி  உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கியுள்ளன.

மேலதிக தகவல் – கந்தளாய் யூசுப்

புதிய இணைப்பு

மாவிலாறு குளக்கட்டு உடைப்பெடுக்கும் அபாய நிலையில உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனை அண்டிய  தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது.  

வெருகல், கிண்ணியா, மூதூர் உள்ளிட்ட பல தாழ் நிலப் பகுதிகளும் வெள்ள அபாயத்தின் கீழ் உள்ளன. 

மேலதிக தகவல் – ரொஷான்

முதலாம் இணைப்பு

மாவிலாறு குளக்கட்டு உடைந்துள்ளதால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை 13  இடங்களில்  உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணாக அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்.. 

இந்தநிலையில், மாவிலாறு நீர்த்தேகத்தின் நீர்மட்டம் கடுமையாக உயர்வடைந்துள்ளடன் கரைகள் உடைப்பெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இதன் காரணமாக, சுற்றுப்புற தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறி, நியமிக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உடன் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   

மேலும், மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு  ஆகியன   அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version