Home இலங்கை சமூகம் விமானப் படைத் தளத்திற்கு நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட அநுர

விமானப் படைத் தளத்திற்கு நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட அநுர

0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று இரவு விமானப் படைத் தலைமையகத்திற்கு நேரடியாக சென்று நாட்டின் சீரற்ற காலநிலை கள நிலவரங்கள் குறித்து கலந்தாலோசித்துள்ளார். 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மிக அதிகளவான உயிரிழப்புக்களையும், சேதங்களையும் மக்கள் சந்தித்துள்ளனர். 

மக்களை மீட்கும் பணியில் முப்படையினர் 

இந்தநிலையில், வெள்ளம்  மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களில் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். 

இதன்படி, அனர்த்தங்களில் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் இலங்கை விமானப்படை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. 

இந்தநிலையில், குறித்த பணிகளை  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version