Home இலங்கை சமூகம் முகப்புத்தகம் மூலமாக போதைப்பொருள் விருந்து: 21 இளைஞர்கள் சிக்கினர்!

முகப்புத்தகம் மூலமாக போதைப்பொருள் விருந்து: 21 இளைஞர்கள் சிக்கினர்!

0

முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பாக நள்ளிரவு நேரத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 21 இளைஞர்களை கடுவெல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடுவெல, வெலிவிட்டவில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது அங்கிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உட்பட பல சட்டவிரோத பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணை

22 முதல் 27 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள், கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கடுவெல காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version