ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ஆம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முதல் முறையாக பகத் பாசில் நடித்திருந்தார்.
பகத் பாசில் சம்பளம்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே கைதட்டல்களை அள்ளிய நடிகர் பகத் பாசில் இப்படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பகத் பாசில் ரூ. 2 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பகத்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகர் பகத் பாசில். இதன்பின் கமலின் விக்ரம், மாரி செல்வராஜின் மாமன்னன் ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் ரசிகர்கள் சம்பாதித்து வைத்துள்ள பகத் பாசில் வேட்டையன் படத்தின் மூலம், எந்த கதாபாத்திரத்திலும் நான் அதில் தனித்து விளங்குவேன் என மீண்டும் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://cineulagam.com/article/fahad-fazil-salary-for-acting-in-vettaiyan-movie-1728814108
