Home இலங்கை சமூகம் நடுக்கடலில் கடற்றொழிலாளர்களுக்கிடையில் மோதல்: ஒருவர் பலி

நடுக்கடலில் கடற்றொழிலாளர்களுக்கிடையில் மோதல்: ஒருவர் பலி

0

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பல் ஒன்றில் ஆறு கடற்றொழிலாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதல் நடுக்கடலில் இடம்பெற்றுள்ளதுடன், கப்பலில் இருந்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதாக பேருவளை கடற்றொழில் பரிசோதகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பேருவளை சுங்க வீதியில் வசிக்கும் சுமணசிறி பெர்னாண்டோ என்ற குறித்த கப்பலின் உரிமையாளர் பேருவளை காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு

உயிரிழந்தவரின் சடலம் பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 180 கடல் மைல் தொலைவில் இருந்து அதே கப்பலில் பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மாகல்கந்த, ரொக்லண்ட் வத்த பிரதேசத்தை சேர்ந்த எம். கே. சந்தன உபுல் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/one-of-the-six-fishermen-died-in-mediterranean-1718879640

NO COMMENTS

Exit mobile version