Home இலங்கை சமூகம் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடர்பில் புதிய நடைமுறை

தேங்காய் எண்ணெய் விற்பனை தொடர்பில் புதிய நடைமுறை

0

 தேங்காய் எண்ணெய் விற்பனை தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணவக்க தெரிவித்துள்ளார்.

சந்தையில் பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையை தடை செய்யும் நோக்கில் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தியாளர் யார், தேங்காய் எண்ணெய் உற்பத்தி உள்ளடக்கம் பற்றிய விபரங்கள் என்பன உள்ளடக்கப்படாது விற்பனை செய்யவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் என்ற பெயரில்

தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் சந்தையில் பல்வேறு எண்ணெய் வகைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தரமற்ற எண்ணெய் வகைகளை நுகர்வதனால் பல்வேறு தொற்றா நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் உற்பத்திகளில், உற்பத்தியாளர் யார் என்பது பற்றியும், உள்ளடக்கம் என்ன என்பது பற்றியும் தகவல்கள் காட்சியாகும் வகையில் விற்பனை செய்யப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்த சில மாத கால அவகாசம் வழங்கப்படும் பின்னர் நடைமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் கலப்பு எண்ணெய் வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணவக்க தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version