பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் புகைப்படம் என போலியாக உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட புகைப்படம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது தொடர்பாக காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவிடம் தகவல் தெரிவித்து, பொறுப்பானவர்களைக் கைது செய்யுமாறு கோரியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, புனையப்பட்ட செய்தி அறிக்கைகளுடன் பகிரப்பட்ட குறித்த புகைப்படத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மாக அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
போலிச் செய்தி
இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஆறு பாதாள உலக நபர்களின் வருகையுடன் தொடர்பு தொடர்பு படுத்தி சர்ச்சைக்குரிய இந்ந புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அந்தப் போலி புகைப்படங்களையும், போலிச் செய்திகளையும் கடுமையாக நிராகரிப்பதாக பொதுபாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
