Home இலங்கை சமூகம் அம்பாறையில் யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் பலி

அம்பாறையில் யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் பலி

0

அம்பாறை (Ampara) மாவட்டம் நிந்தவூரில் மணல் அகழ்வு வேலைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம் (20.08.2024) நிந்தவூர்
பொலிஸ் பிரிவிற்குட்பட்டதும் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்டதுமான
அல்லிமூலை மல்கம்பட்டி வயல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நிந்தவூர் 21 ஆம் பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது
மதிக்கத்தக்க குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

வயல் அறுவடை காலம்

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை
அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று மாலை அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில்
சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும்
அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/family-killed-in-elephant-attack-1724164918

NO COMMENTS

Exit mobile version