Home இலங்கை குற்றம் மூதூரில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் கைது

மூதூரில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் கைது

0

Courtesy: Kiyas Shafee

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர்,
10 கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் புதன்கிழமை (11) இரவு,
இவரை கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தப்படுவதாக எங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,
குறித்த இடத்துக்குச் சென்று, குறித்த சந்தேக நபரை சோதனை செய்த போது,
அவரிடமிருந்து குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்நிலையில், சந்தேகநபர், மேலதிக விசாரணைக்காக மூதூர் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/family-man-arrested-with-drugs-in-trincomalee-1733991904

NO COMMENTS

Exit mobile version