Home இலங்கை சமூகம் அராலியில் குறி சொல்லும் கோவிலுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

அராலியில் குறி சொல்லும் கோவிலுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

0

குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர்
இன்றையதினம்(29) உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச்
சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில், அராலி மத்தியில்
உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார்.

நோயாளர் காவு வண்டி

இந்நிலையில், அங்கிருந்த சாமியார்
அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார்.

அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி
விழுந்துள்ளார்.

அதன் பின்னர், அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்ட நிலையில்
அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துவிட்டு நோயாளர் காவு வண்டி திரும்பிச்
சென்றது.

இந்நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ
இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version