யாழில் (Jaffna) இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 39 வயதான தெ.கோபாலசாமி என்பவரே நேற்றிரவு (25) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “குறித்த குடும்பஸ்தர் கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள உறவினரின்
வீட்டுக்கு சென்றிருந்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
நேற்று அதிகாலை 3.00 மணியளவில் அங்கு இரத்த வாந்தி
எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில்
சேர்ப்பிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
இந்த நிலையில் சாட்சிகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
