Home இலங்கை சமூகம் வாவியில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப மரணம்!

வாவியில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப மரணம்!

0

வாவியில் நீராடிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக
உயிரிழந்துள்ளார்.

அம்பாறை, பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரியாவ வாவியில் நேற்று முன்தினம் நீராடிக்கொண்டிருந்த குடும்பஸ்தரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

மாபலகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இந்தச்
சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பண்டாரதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நண்பர்களுடன் இணைந்து நவகிரியாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த போது
திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில்
தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version