Home இலங்கை சமூகம் வவுனியாவில் மாணவி குளிப்பதை காணொளி எடுத்த குடும்பஸ்தர்

வவுனியாவில் மாணவி குளிப்பதை காணொளி எடுத்த குடும்பஸ்தர்

0

வவுனியாவில் (Vavuniya) 15 வயது மாணவி குளிப்பதை காணொளி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (17) இடம்பெற்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஆலயம் ஒன்றின் கட்டுமாணப் பணி இடம்பெற்று வருகின்றது.

இளம் குடும்பஸ்தர் 

இந்தநிலையில், குறித்த ஆலயத்தில் மரவேலைகளில் ஈடுபட்ட 35 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள மாணவி தனது வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது வேலியால் குறித்த பெண்ணை காணொளி எடுத்ததாக வவுனியா காவல்துறையினரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டையடுத்து, 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்பு, அவரது தொலைபேசி இராசாயன பகுபாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version